வேலாயுதம்பாளையம்,:நொய்யல் அருகேயுள்ள முனியப்ப ஸ்வாமி கோவில் திருவிழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, முனியப்பசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று மாலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து கிடா மற்றும் கோழிகளை அறுத்து சிறப்பு பூஜை செய்தனர். இரவு, 11 மணிக்கு வாண வேடிக்கையும் நடந்தது.இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்பசாமியை தரிசனம் செய்தனர்.