இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பின் மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்து 857 வருமானம் கிடைத்துள்ளது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஜூன் 28ல் அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை கமிஷனர் சுவாமிநாதன் உத்தரவின்படி துணை ஆணையர் ( நகை சரிபார்த்தல் ) அன்புமணி , பரமக்குடி ஆய்வாளர் துரைராஜ் முன்னிலையில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியாரால் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. ரொக்கம் 7,50 , 857 ரூபாயும் , தங்கம் 90 கிராம் , வெள்ளி 80 கிராம் இருந்தது. எண்ணிக்கையில் இளையான்குடி பாண்டியன் கிராம பாங்க் அலுவலர்கள், சிவகங்கை தேவஸ்தான பணியாளர்கள் , கீழாயூர் காலனி மகளிர் குழுக்கள், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.