திருநெல்வேலி : பாளை., திரிபுராந்தீஸ்சுவரர்(சிவன்) கோயிலில் நேற்று காலை ருத்ர ஏகாதசி வேள்வி நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பாளை., திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ருத்ர ஏகாதசி வேள்வி நடந்தது. இந்த வேள்வியை 15 வேத விற்பன்னர்கள் நடத்தினர். இதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் பாளை., மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாளை., திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.