பதிவு செய்த நாள்
02
ஜூலை
2011
11:07
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆறுமுகநேரியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு 24வது ஆனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு காலை கும்பபூஜை, ஹோமம், வாஸ்து சாந்தி நடந்தது. இதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் திருவீதி உலா நடந்தது. பின்னர் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனையும் நடந்தது. இதனை சிவாச்சாரியார்கள் ராமசுப்பிரமணியன், சுப்பிரமணியன் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில் பக்தஜன சபை தலைவர் சண்முகவெங்கடேசன், செயலாளர் கந்தையா, பொரு ளாளர் அரிகிருஷ்ணன், மணியம் சுப்பையா, துணை செயலாளர் குழந்தைவேல், நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன், தவமணி, கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், திருநாவுக்கரசர் சுவாமிகள் உழவாரப்பணி, திருவீதி உலாவும் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை சிவப்பு சாத்தியும், 4ம் தேதி பச்சை சாத்தியும் நடக்கிறது. 10ம் திருவிழா 6ம் தேதியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் இரவு பக்தி சொற்பொழிவும் பக்தி இன்னிசையும் நடக்கிறது. ஏற்பாடுகளை பக்தஜன சபையினர் செய்து வருகின்றனர்.