பதிவு செய்த நாள்
02
ஜூலை
2011
11:07
தூத்துக்குடி : முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடை நாளை துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 5ம் தேதி கோயில் கொடை விழா நடக்கிறது. முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடைவிழா நாளை இரவு 8 மணிக்கு சமயசொற்பொழிவுடன் துவங்குகிறது. 4ம் தேதி காலை 6 மணிக்கு பந்தல் திறப்பு விழாவும், இரவு 7 மணிக்கு மகுட ஆட்டம், அதைத்தொடர்ந்து செண்டை வாத்தியம், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்பிகைக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடக்கிறது. வரும் 5ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு மகா கணபதிஹோமமும், காலை 6 மணிக்கு பூராஹூதியும், காலை 6.30 முதல் 7.30மணிக்குள் கும்ப ஆவாஷணம் கும்ப பூஜை, ஜெபம் தேவி மகாத்மபாராயணம், அம்பாள் மூலமந்திர ஹோமமும் நடக்கிறது. காலை 9 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து அபிஷேக தீர்த்தம் பால்குடம் எடுத்து மேளதாளத்துடன் யானையுடன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.பகல் 12.30 மணிக்கு மஹா அலங்காரம், மஹா தீபாராதனையும் நடக்கிறது, பகல் 1 மணிக்கு அபிஷேக பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு கரகாட்டமும், குறவன், குறத்திஆட்டமும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்பிகைக்கு அலங்கார தீபாராதனையும்,வாணவேடிக்கையுடன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 6ம் தேதி அம்பிகைக் மஞ்சள்நீர் பொங்க வைத்து அம்பாள் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு பட்டிமன்றம், மேஜிக் ÷ஷா, பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடக்கிறது. வரும் 8ம் தேதி இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 9மணிக்கு பட்டிமன்றமும் நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு திரைப்பட இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முக்காணி சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்துவருகின்றனர்.