Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 20 ஆண்டுக்குப்பின் நடந்த உடையாளி ... வீரநாராயண பெருமாள் கோவிலில் தேர் திருவிழா! வீரநாராயண பெருமாள் கோவிலில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அப்பர் கரையேறிய வரலாற்று பெருவிழா!
எழுத்தின் அளவு:
அப்பர் கரையேறிய வரலாற்று பெருவிழா!

பதிவு செய்த நாள்

06 மே
2015
11:05

கடலூர்: கடலூர், பழைய வண்டிப்பாளையத்தில் அப்பர் கரையேறிய வரலாற்று பெருவிழா நேற்று நடைபெற்றது. சைவ குறவர்களின் ஒருவரான  அப்பர் என்கிற திருநாவுக்கரசர் சைவ சமயத்தின் சிறப்புகளை பாடி வந்தார். அதனை அறிந்த சமண சமயத்தைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவ  மன்னன் உத்தரவின் பேரில் திருநாவுக்கரசர் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டார். அப்போது திருவாவுக்கரசர் ‘சொற்றுணை வேதியன்’ எனத்  தொடக்கும் நமச்சிவாய பதிகத்தை ஓதியபடி கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலூர், வண்டிப்பாளையத்தில் கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில்  எழுந்தருளிவரும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை வழிபட்டார். இந்த வரலாற்று பெருவிழா ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாத அனுஷ  நட்சத்திரத்தன்று பாடலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சித்திரை மாத அனுஷ நட்சத்திரத்தையொட்டி அப்பர் கரை÷ யறிய வரலாற்று பெருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடந்தது.

தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி, அப்பர் உற்சவர்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அப்பர் வெள்ளி விமானத்தி லும், பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர்  விமானத்திலும் ஊர்வலமாக  வண்டிப்பாளையம் சென்றதும்,  அங்கு சுப்பரமணி சுவாமி கோவில் நிர்வாகத்தால் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கரையேறவிட்டக்குப்பத்தில், அப்பர் கரை யேறிய குளக்கரையில் எழுந்தருளினார். அங்கு ஓதுவார்கள் நமச்சிவாயம் பதிகத்தைப் பாட அப்பர் குளத்தில் 10 முறை தெப்பமடித்து கரையேறிய  வரலாற்று பெருவிழா நடந்தது. தொடர்ந்து அப்பருக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர், சுப் ரமணிய சுவாமி மற்றும் விநாயகருடன் அப்பர் வீதியுலாவாக வந்து பழைய வண்டிப்பாளையத்தில் மண்டகப்படி நடைபெற்றது. அங்கு மாலை  சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து ஓதுவார்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி  வீதியுலாவாக பாடலீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, நிர்வாக அலு வலர் ரத்தினாம்பாள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar