பதிவு செய்த நாள்
07
மே
2015
12:05
கோத்தகிரி : கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில், ரத ஊர்லவலம் பார்வையாளர்களை கவர்ந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக, கேரள ரத ஊர்வலம் நடந்தது. டானிங்டனிலிருந்து துவங் கிய ஊர்வலத்தில், சிங்காரி மேளம், செண்டை வாத்தியம் முழங்க, மகா காளியம்மன், வீர அனுமான் உருவம் ஆகியவை வலம் வந்தன. காமராஜர் சதுக்கம், ராம்சந்த், மார்கெட், பஸ் நிலையம், காம்பாய் கடை வழியாக ஊர்வலம் கோவிலுக்கு சென்றது.பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு, அபிஷேக அலங்கார மலர் வழிபாடும், பகல், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மன், நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.