பதிவு செய்த நாள்
04
ஜூலை
2011
11:07
ஆண்டிபட்டி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு 35 குண்டங்களுடன் கூடிய நவக்குண்ட பட்ச யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஜூலை 10ல் நடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ராஜகோபுரத்திற்கு 9 குண்டங்களும், சுவாமிக்கு 9 குண்டங்களும், அம்மனுக்கு 9 குண்டங்களும், பரிவார தேவதைகளான விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, கொடிமரம், பைரவர், நடராஜர், சூரிய சந்திரன் ஆகியோர்களுக்கு 8 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு காலம் நடக்கும் யாகசாலை பூஜையில் 70 சிவாச்சரியார்கள் கலந்து கொண்டு பூஜைசெய்ய உள்ளனர்.
ஆலோசனை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி., விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. கோயிலிற்கு கடைவீதி, நாடார் தெரு, ஓடைத்தெரு, வாரச்சந்தை ஆகிய பகுதிகள் வழியாக செல்ல முடியும். இங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வாரச்சந்தை பகுதி தேர்வு செய்யப்பட்டது.நிர்வாக அதிகாரி ரம்யசுபாஷினி, கோயில் குருக்கள் சிவக்குமார், ராஜகோபுர திருப்பணிக்குழு, கும்பாபிஷேக விழாக்குழுவினர் பங்கேற்றனர்.