பதிவு செய்த நாள்
14
மே
2015
11:05
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை கிராமத்தில் உள்ள நீலியம்மன், செல்லியம்மன், எல்லமுத்துசாமி, பெரியசாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த, 5ம் தேதி இரவு, காப்பு கட்டுதலும் விழா தொடங்கியது. தொடர்ந்து, 6ம்தேதி சந்தி மறித்தல், 11ம்தேதி வரை கேடயம், அன்னம், சிம்மம், குதிரை போன்ற வாகனங்களில், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து, 12ம் தேதி பெரியசாமி, அம்மன் கோவில்களில் பூஜை நடந்தது. தொடர்ந்து, தேரோட்டம், 10 மணிக்கு நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் நீல்ராஜ், இயக்குனர்கள் பூபதி, மணி, அ.தி.மு.க., நகர செயலாளர் ராமச்சந்திரன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், நகராட்சி கவுன்சிலர் பேபிகாமராஜ் உட்பட பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்த தேர், மாலையில் நிலை நின்றது. இன்று, மஞ்சள் நீருடன் விழா நிறைவடைகிறது.