பதிவு செய்த நாள்
15
மே
2015
12:05
திருவள்ளூர் : திருவள்ளூர் பகுதிகளில், தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவி லில், நேற்று காலை, குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதே போல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவா - விஷ்ணு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. மேலும், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வர சுவாமி கோவில், பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரி கோவிலில் உள்ள தண்டியடிகள் நாயனாருக்கு, குரு பூஜை, அபிஷேகம் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.