விஜயமாநகரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2015 12:05
மங்கலம்பேட்டை: விஜயமாநகரம் திரவுபதியம்மன் கோவிலில் இன்று தீ மிதி திருவிழா நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. தினசரி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இன்று (15ம் தேதி) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணிக்கு கோவில் வாசலில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடக்கிறது.