திருப்புத்தூர் : திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு இன்று பொங்கல் விழா நடக்கிறது. இக்கோயிலில் மே 9ல் காப்புக் கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினமும் சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து, இரவில் திருக்குளத்தை பவனி வருதல் நடைபெறுகிறது.10ம் திருநாளான இன்று கோயில் வளாகத்தில் மாலை 3 மணிக்கு பொங்கலிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்.