பாட்னா: பீகார் மாநிலத்தில் மகாவீர் கோயில் கட்டும் திட்டததிற்கு முஸ்லிம் இனத்தவர்கள் தங்கள் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் ரூ500 கோடி மதிப்பில் மகாவீர் கோவில் கட்ட திட்டமிடப்பட்டது. இதனையடுத்து கோவில் கட்டப்பட உள்ள பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தங்களின் நிலங்களை தானமாகவும் விற்பனையும் செய்ததுடன் நில்லாமல் கோவில் விரைவாக கட்டவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மகாவீர் கோயில் 200 ஏக்கர் பரப்பளவில் 2 ஆயிரத்து அடி நீளம், ஆயிரத்து 296 அடி அகலம், 379 அடி உயரத்துடன் கட்டப்பட உள்ளது. கோவிலி்ன் உள்ளே 18 சிறிய கோவில்கள், ராமர் சீதை சன்னதி மற்றும் மிகப்பெரிய சிவலிங்கம் அமைக்கப்பட உள்ளது.