திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அயனீச்சுரம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கைலாசநாதர் கோயிலில் ஏழடி உயரம், 250 கிலோ எடை கொண்ட பிட்சாடனர் சிலை உள்ளது. பாதத்தின் பிடிமானம் தவிர, வேறு எந்தவித தாங்கலும் இல்லாமல் அதிசயமாக, அனாயசமாக நிற்கிறது இந்தச் சிலை. சிலையின் புவியீர்ப்பு விசை அதன் பாதத்தின் நடுப்பகுதியில் விழுமாறு மிகத் துல்லியமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.