Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வெயிலுகந்தம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்! வெயிலுகந்தம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் அக்னி நட்சத்திர சித்திரைக் கழுவு விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் அக்னி நட்சத்திர சித்திரைக் கழுவு விழா!

பதிவு செய்த நாள்

20 மே
2015
05:05

பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா "சித்திரை கழுவு டன் நாளை நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் மாட்டுவண்டிகளில் வந்து மலைக்கோயிலில் குவிந்துள்ளனர்.அக்னி நட்சத்திர காலகட்டமான சித்திரையின் பின் 7 நாட்கள், வைகாசியில் முன் 7 நாட்களை "சித்திரைக் கழுவு என அழைக்கின்றனர். இந்த நாட்களில் பழநிமலைக்கோயில் கிரிவீதியை வலம் வருவது சிறப்பு. கிரிவலப் பாதையிலுள்ள கடம்ப மரத்திலிருந்து வீசும் சஞ்சீவி மூலிகை காற்று சகல நோய்களை, தீர்க்க வல்லது என்ற ஐதீகம் உள்ளது.

இதனால் கிரிவீதியில் உள்ள கடம்ப மரத்தில் பூத்துக் குலுங்கும் பூவையும், இலைகளையும், பெண்கள் தங்களது தலையில் சூடிக் கொண்டும் மலையை கிரிவலம் வருகின்றனர். நாளைய சித்திரைக் கழுவு நிறைவு விழாவை முன்னிட்டு உடுமலை, திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை, பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதல் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்துள்ளனர். அவர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடிகள் எடுத்து ஆட்ட பாட்டத்துடன் கிரிவீதியை வலம் வந்து நாளை அதிகாலை 3 மணி முதல் மலையை கிரிவலம் வருவர். காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்கின்றனர். மாலை 5 மணிக்கு மேல் ஒருதரப்பினர் மலையை கிரிவலம் வந்து மலைக்கோயிலில் ராஜஅலங்காரத்தில் ஞான தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கின்றனர். உடுமலை பக்தர் கந்தர்மணி கூறுகையில்,"" சித்திரைக் கழுவு விழாவிற்கு 20 ஆண்டுகளாக வருகிறோம். ஊர்மக்கள் ஒன்றாக இணைந்து மாட்டுவண்டியில் வந்து மலையை கிரிவலம் வந்து பின் அதிகாலை முருகனை தரிசனம் செய்வது வழக்கம்,என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar