எப்படியெல்லாம் செலவழிக்க வேண்டும் என்பதற்கு அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.ஆதமின் மகனே! (தேவை போக மீதியுள்ள) பொருளைச் செலவழித்து விடு. இதுவே உனக்குச் சிறந்தது. இதை உனக்கென்று வைத்துக்கொண்டால் உனக்கு தீமை தான். தேவைக்கேற்ப வைத்துக் கொள்வது இகழ்ச்சிக்குரிய ஒன்றல்ல. எவரெவருக்கு செலவழிக்க நீ கடமைப்பட்டுள்ளாயோ அவர்களுக்கெல்லாம் செலவு செய்ய ஆரம்பிப்பாயாக! என்றார்கள். இதற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.தனக்கு தேவையானது போக எஞ்சிய பொருளுக்கு அதிக உரிமையுடையவர் யார் என்ற கேள்வி பிறக்கும். எந்த உறவினர் மீது செலவழிக்க ஒருவன் கடமைப்பட்டிருக்கிறானோ, அவர்களே அந்தப் பொருளுக்கு அதிக உரிமையுடையவர்கள். மற்ற மக்களின் உரிமை அதன்பின்பே வருகிறது. இறைவன் அருள்கிறான்: ஆதமின் மகனே! நீ செலவழி; உனக்காக நான் செலவழிப்பேன் என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது. இதை மனதில் கொண்டு, எஞ்சிய பொருளை உரியவர்களுக்காக செலவழித்து நன்மை தேடிக்கொள்ளுங்கள்.