Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமனேஸ்வரத்தில் வைகாசி திருவிழா:நாளை ... பூண்டி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில்100 ஆண்டுகளுக்கு பின் 5 தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2015
04:05

திருநள்ளார்: சனிஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவின்  100 ஆண்டுகளுக்கு பின் 5 தேர் திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Default Image
Next News

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 16ம் தேதி முதல் 17ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 18ம்தேதி  முதல் 21ம் தேதி வரை சுப்ரமணியர் உற்சவம், கடந்த 22ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்தது. கடந்த 24ம் தேதி செண்பகதியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் ஆண்டுதோறும் செண்பகத்தியாகராஜர்,நிலோத்தம்பாள் ஆகிய இரு தேர்திருவிழா நடந்தது. இந்நிலையில் புதிதாக கடந்த சில தினங்களுக்கு முன் வினாயகர்,முருகன்,சண்டியோஸ்வர் ஆகிய மூன்று தேர்கள் வெள்ளோட்டம் நடந்தது.

மேலும் கடந்த 100 ஆண்களுக்கு பின் திருநள்ளார் பகுதியில் 5 தேர்கள் நடைபெற்றது. புதுச்சேரி மின்திறல் குழுமம் சேர்மன் சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் பலர் வடம்பிடித்து துவக்கிவைத்தனர்.

தேர் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்கு வீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா கோஷங்கள் முழுங்க 5 தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும் இன்று சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறவுள்ளது நிகழ்ச்சியின் ஏற்படுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar