ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தற்காலிக கடைகளின் பொது ஏலம் நாளை நடை பெறுகிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் முக்கியமானது ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இந்த கோவிலிற்கு தமிழகம் மட்டும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகத்தின் சார்பில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பூஜை பொருட்கள், பிரசாதம், புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வைத்து விற்பனை செய்யப்படும். இந்த கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். நடப்பு நிதியாண்டில் கடைகள் வைத்து நடத்துவதற்கான ஏலம், கோவில் வளாகத்தில், நாளை (2ம் தேதி) காலை, 11.00 மணிக்கு நடைபெற உள்ளது என உதவி ஆணையர் கார்த்திக் தெரிவித்தார்.