மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது புகழ்பெற்ற பாலமுருகன் திருக்கோயில். இங்கு வள்ளி, தெய்வானையுடன் மூலவர் பாலமுருகன் வீற்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் மலைவாழ் மக்களின் தெய்வங்களான துர்க்கையையும், சீதளா தேவியையும் இங்குள்ள மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதன் பிறகே பாலமுருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரகாரத்தில் சடாமுடியுடன் லிங்கம், விநாயகர், துர்கை, சீதளா தேவி, பத்மாவதி தாயார், வெங்கடேசப் பெருமாள் வீற்றிருக்கின்றனர்.