ரெட்டியார்சத்திரம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. செங்கமலவள்ளி சமேத பெருமாளுக்கு ஏகாந்த சேவை நடந்தது. அனுக்ரக பைரவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயில், சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.