பதிவு செய்த நாள்
07
ஜூலை
2011
11:07
செஞ்சி : அஞ்சாஞ்சேரி சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. செஞ்சி தாலுகா அஞ்சாஞ்சேரியில் ஆதி விநாயகர், செல்வ விநாயகர், சோலைவாழியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 5ம் தேதி மாலை திருவிளக்கு பூஜை, ஐங்கரன் வழிபாடு, முதல்கால வேள்வி, தெய்வங்கள் திருமேனி நிலை நிறுத்துதல், மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி, காலை 9.15 மணிக்கு திருக்குடங்கள் வேள்விசாலையில் இருந்து புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு ஆதிவிநாயகர், செல்வவிநாயகர், சோலை வாழியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் 10 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.