சர்க்கரை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2015 12:06
கள்ளக்குறிச்சி: விருகாவூர் சர்க்கரை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு நிறைவு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் சர்க்கரை விநாயகர் சீனுவாசபெருமாள், சிவசக்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக, ஓராண்டு நிறைவு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு விநாயகர் பூஜை, புன்னியாவஜனம், அபிலிபிருதிருஷ்டை செய்து கணபதி, நவக்கிரகம், தன்வந்திரி, சுதர்சனர், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு யாகம் நடத்தினர்.மகா பூர்ணாஹூதிக்குபின் கலச அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் முத்துசாமி, ஊர் பொதுமக்கள் மற்றும் துளுவ வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.