ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அளிந்திக்கோட்டை மாசானி அம்மன், ஆனைமலை மகாசக்தி ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விநாயகர் பூஜை, யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, யாகசாலையில் இருந்து கும்ப புறப்பாடு நடந்தது. பின்பு கோயில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.