விருதுநகர்: காசிநகர் அமிர்தவள்ளி அம்பிகை சமேத அமிர்த பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்றுமுன்தினம் யாகசாலைபூஜை, ஹோமங்கள் துவங்கின.
நேற்று காலையில் 108 பால் கலசாபிஷேகமும், திரவிய மூலிகை, சங்காபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு விமானத்திற்கும், அமிர்த லிங்கேஸ்வரர், பரிவார தெய்வங்களுக்கும் வருஷாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.