பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
11:06
பெரம்பலூர்: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, 500 பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து, தீரன் நகரில் உள்ள சீரடி சாய்பாபா ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சீரடி சாயிபாபா கோவிலை வந்தடைந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட சீரடிசாயிபாபா படம், கேரள செண்டை மேளம், தமிழக பாரம்பரிய தப்பாட்ட நிகழ்ச்சியுடன், தவில்- நாதஸ்வரம் முழங்க யானையுடன் , ஊர்வலமாக ரதத்தில் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, சாய் பாபாவுக்கு பால்அபிசேகம் நடந்தது. மகா கணபதி ஹோமமும், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, 2ம் கால யாகசாலை பூஜையும், மகா அபிசேகமும், சங்காபிசேகமும் நடக்கிறது. மதியம், ஒரு மணிக்கு சிறப்பு அலங்காரமும், ஆரத்தியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை சீரடி மதுரம் சாய்பாபா அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், அறக்கட்டளை தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா ரெங்கராஜ், மற்றும் அறக்கட்டளை இயக்குனர்கள் அனுப்பிரியா, பரமேஸ்வரி, அனுசியா மற்றும் பக்தர்கள் செய்தனர்.