தினமுமே குர்ஆனை படிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது, ரமலான் காலத்தில் அதுபற்றி சொல்லத் தேவையில்லை. குர்ஆனை படிப்பவர் இறைவனுடன் பேசிக் கொண்டிருப்பதாக பொருள்.“ஒருவர் திருக்குர்ஆனை ஓதுவதிலேயே முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார். என்னிடம் துஆ (பிரார்த்தனை) புரிவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை என்றாலும், என்னிடம் வேண்டி பிரார்த்திப்போரை விட, இத்தகைய அடியானுக்கு அவன் (இறைவன்) என்னிடம் கேட்காமலேயே அதிகமாக (நன்மை) வழங்குகிறான்,” என்று நபிகள் நாயகம் கூறுகிறார். அதாவது, தொழுகையை விட குர்ஆன் படித்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். மேலும், “திருக்குர்ஆனை ஓதும் ஒரு அடியவர் , மற்றவர்களை விடவும் அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தைப் பெறுகின்றார்,” என்கிறார் நாயகம். நீங்களும் தினமும் குர்ஆன் படியுங்கள். அதிலுள்ள கருத்துக்களை வாழ்க்கையில் பின்பற்றுங்கள். பல ஆயிரம் நன்மைகளை அடையுங்கள்.