பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. முன்னதாக வடகரை வரதப்பர் தெருவிலிருந்து பூசாரி வீட்டல் இருந்து கம்பம், கரகம் மற்றும் முளைப்பாரி எடுத்துவரப்பட்டது. அம்மனுக்கு நேர் பாதையில் கம்பம் நடப்பட்டு, அபிஷேகங்கள் செய்யப்பட்டன. செயல்அலுவலர் சுதா, வர்த்தக சங்க தலைவர் பி.சி.சிதம்பரசூரியவேலு, முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.பி.துரைராஜ், வர்த்தக பிரமுகர்கள் முத்துவேல்பாண்டியராஜன், அய்யாச்சாமி, அன்னகாமு உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 11ல் கொடியேற்றம், ஜூலை 19ல் மாவிளக்கு, 20ல் அக்னிச்சட்டி திருவிழா நடக்கிறது.