பதிவு செய்த நாள்
09
ஜூலை
2011
11:07
திருநெல்வேலி : மேலப்பாட்டம் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 10ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைமுன்னிட்டு ஜூலை 8ம் தேதி காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், தனலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி ஆகியன நடந்தது. இரவு ஆச்சார்யவர்ணம், ரட்சாபந்தனம், யாகசாலை பிரவேசம், யாகபூஜை, பூர்ணாகுதி மற்றும் பிரவேச பலி ஆகியன நடந்தது. 9ம் தேதி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு யந்திரஸ்தாபனம், ரத்ன விண்யாகம், அவுசத பந்தனம் நடந்தன.
10ம் தேதி காலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, ரஷாபந்தனம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம் ஆகியன நடக்கிறது. காலை 6.45 மணிக்கு கடம் எழுந்தருளல் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் விமானம் மற்றும் மூலஸ்தான அபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு பால்குடம் எடுத்து வரப்படுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அனந்தகிருஷ்ண பட்டாச்சாரியார் செய்து வருகிறார்.