அவிநாசி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2015 12:06
அவிநாசி: துலுக்கமுத்தூர் மாகாளியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதையொட்டி, விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை அடைந்தது. கோவிலில், மாகாளியம்மனுக்கு சிறப்பு ஹோம பூஜை, அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. துலுக்கமுத்தூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஆட்டையாம்பாளையத்தில் உள்ள மயிலம்மன் கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. மயிலம்மன், கணபதி, பாலமுருகன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.குலாலர் திருமணமண்டப அறக்கட்டளை, இளைஞர் மற்றும் மகளிரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.