பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
12:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகி யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், 11ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரம ஆலயத்தின், 11ம் ஆண்டு, கும்பாபிஷேக நிறைவு விழா, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், நேற்று முன்தினம், ஹோமம், அதிஷ்டானத்தில் அபிஷேக பூஜை, பகவானின் அனுபவங்கள் பகிர்தல், தேவாரம், திருவாசகம் பாடுதல் ஆகியன நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 7மணிக்கு, மஹா கும்பாபிஷேகம், பக்தர்கள் பஜனை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மேலும், ஹிந்தி மொழியில் யோகியின் இரண்டு சரித்தரம், திவ்ய பிஷூ, ப்ரேம் தரங், ஆகிய இரண்டு புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. குச்சிப்புடி நடனம், ஆரத்தி நிகழ்ச்சி, வெள்ளி ரத ஊர்வலம் ஆகியன நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, யோகிராம் ஆஸ்ரம நிர்வாகி ஐஸ்டிஸ் அருணாசலம் செய்திருந்தார்.