நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் அய்யனாரப்பன் கோவில், கும்பாபிஷேகம் இன்று (29ம் தேதி) நடக்கிறது. நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் அய்யனாரப்பன், குளத்து மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம், முதல் கால பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. இன்று (29ம் தேதி) காலை 8.00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9.00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித ஊர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவல் குழு நிர்வாகிகள் ஆதிமூலம், ராஜாராம், முருகையன், ஆறுமுகம் உட்பட பலர் செய்துள்ளனர்.