பதிவு செய்த நாள்
02
ஜூலை
2015
11:07
பெங்களூரு: ஹலசூரு காளி அம்மன் கோவிலில், நாளை மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. நாளை காலை, 8:00 மணி முதல் 11:30 மணி வரை, மகா சுதர்சன ஹோமமும், நண்பகல், 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. ஹோமத்துக்கு நெய், அன்னதானத்துக்கு நன்கொடையும் பக்தர்கள் வழங்கலாம். இன்று இரவு, 7:00 மணிக்கு, சுதர்சன சக்ர பூஜை நடக்கிறது. சங்கல்பம், பூஜைக்கு, 201 ரூபாயும், சங்கல்பம், பூஜை, அன்னதானத்துக்கு, 501 ரூபாயும் கட்டணம் என, ஆலய தர்மகர்த்தா தெரிவித்துள்ளார்.