பதிவு செய்த நாள்
02
ஜூலை
2015
11:07
ஆலங்குடி: வரும், 5ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ளதால், அன்றைய தினம், குரு பரிகார தலங்களான திட்டை மற்றும் ஆலங்குடிக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. காலை, 6:00 மணி சென்னை, திருவல்லிக்கேணியில் புறப்பாடு பிற்பகல், 2:00 மணி தஞ்சாவூர்; திட்டை குரு ஸ்தலம், இரவு, 7:00 மணி ஆலங்குடி, இரவு, 12:00 மணி சென்னை புறப்பாடு, மறுநாள் காலை, 6:00 மணி சென்னை. இந்த சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு கட்டணம், 1,750 ரூபாய். மேலும் விவரங்களுக்கு, 2533 3857, 2533 3333, 2533 3286 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.