Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ஸ்ரீமந் நாராயணீயம் ஓர் அறிமுகம்!
ஸ்ரீமந் நாராயணீயம் ஓர் அறிமுகம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீமந் நாராயணீயம் ஓர் அறிமுகம்!

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
03:07

ஸ்ரீமந் நாராயணீயம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580-ஆம் ஆண்டின் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீகுருவாயூரப்பனின் சன்னிதியிலேயே அமர்ந்து இதனை இவர் இயற்றினார்.


இதனை இயற்றக் காரணம்?

கேரள மாநிலத்தில் உள்ள மேப்பத்தூர் என்ற இல்லத்தில் நாராயண பட்டத்ரி பிறந்தார். இவர் பல வேத சாஸ்திரங்களை ஐயம் இன்றி தெளிவாகக் கற்றறிந்தார். இயற்கையாகவே மிகுந்த பக்தி உடையவரான பட்டத்ரியை, வாத நோய் பீடித்தது. இதனால் மிகவும் சிரமப்பட்ட நிலையில் இருந்த அவரிடம் ஒரு ஜோசியர், நீ சென்று ஸ்ரீகுருவாயூரப்பனின் இடத்தை அடைந்து, அங்கு அவனுடைய பெருமைகளை விளக்கும் நூலை இயற்றினால் இந்த நோய் நீங்கும் என்றார். உடனே இவரும் குருவாயூரை அடைந்து அங்கு உள்ள கோயிலில் அமர்ந்து தினந்தோறும் பத்து ஸ்லோகம் வீதம் எழுதினார். அவருடைய நோயும் நீங்கியது.

இதன் சிறப்பு என்ன?

ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமாகவே நாராயணீயத்தை இவர் இயற்றினார். ஸ்ரீமத் பாகவதம் என்பது வேத வ்யாஸரால் இயற்றப்பட்டு, பின்னர் சுகர் என்ற முனிவர் பரீக்ஷித் மஹாராஜாவிற்கு உபதேஸித்தது ஆகும். பட்டத்ரி ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்த பின்னரும் இவ்வாறு சுகர் பரீக்ஷித் மஹாராஜாவிடம் கூறினார்? என்று ஸ்ரீகுருவாயூரப்பனிடம் கேட்க, ஸ்ரீகுருவாயூரப்பனும் ஆமாம். என்பதுபோல் தலையை அசைத்து ஆமோதித்தாதானாம். மேலும் ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை பட்டத்ரி கண் முன்பே மீண்டும் தானே நிகழ்த்தியும் காட்டினானாம். இறுதியாக தான் வைகுண்டத்தில் எப்படி இருப்பேன் என்றும் காட்சி அளித்தார்.

நூலின் அமைப்பு

இந்த நூலில் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. இதனை 100 தசகங்களாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு தசகத்திலும் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்லோகங்கள் உள்ளன. மொத்தம் நூறு தசகங்கள் உள்ளன. இந்த தசகங்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் 12 ஸ்கந்தங்களை விளக்குவதாக உள்ளன.

நூலின் பெருமை

இந்த நூல் ஸர்வ நோய் நிவாரணி என்று சொன்னால் அதனை மறுக்க இயலாது. இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் பல எண்ணற்ற பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பல தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்துக் கொண்டதாக செய்திகள் உள்ளன. இதனைப் படித்த சில தினங்களிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாகவும் பலர் கூறுகின்றனர். மேலும் பட்டத்ரியும் தனது நூலை முடிக்கும்போது பகவானிடம் - ஆயுர் ஆரோக்ய ஸௌக்யம் - என்றே வேண்டுகிறார். ஆக இந்த நூலை ஸ்ர்வநோய் நிவாரணி என்று கூறமுடியும்.

நன்றி: க.ஸ்ரீதரன்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar