Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ப்ரும்மாவின் தவம்
ப்ரும்மாவின் தவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
04:07

1 ஸ்தித: ஸ கமலோத் பவ: தவ ஹி நாபி பங்கேருஹே
குதஸ்வித் இதம் அம்புத உதிதம் இதி அனா லோகயன்
ததீக்ஷண குதூஹலாத் ப்ரதி திசம் விவ்ருத்தாநநம்
சதுர்வதநதாம் அகாத் விகஸதஷ்ட த்ருஷ்ட்ய அம்புஜாம்

பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து தோன்றிய ப்ரும்மா, தான் அமர்ந்துள்ள அந்த தாமரை மலர், இந்த சமுத்திரத்தில் எந்த இடத்தில் இருந்து தோன்றியது என்று வியப்படைந்தான். அதற்காக ஒவ்வொரு திசையாக தனது பார்வையைத் திருப்பினான். அவ்வாறு தனது தலையை ஒவ்வொரு திசையில் திருப்பும்போதும் ஒவ்வொரு தலையைப் பெற்று, இப்படியாக நான்கு தலையையும், எட்டு கண்களையும் பெற்றான்.

2. மஹா அர்ணவ விகூர்ணிதம் கமலமேவ தத் கேவலம்
விலோக்ய தத் உபாச்ரயம் தவ தனும் து நாலோகயன்
க ஏவ கமலோதரே மஹதி நி: ஸஹாயோஹ்யஹம்
குத: ஸவித் இதம் அம்புஜம் ஸமஜநி இதி சிந்தாம் அகாத்

பொருள்: ஸ்ரீ அப்பனே! அத்தனை பெரிய கடலில் அந்தத் தாமரை மலர் மட்டும் தனியாக அசைவதைக் கண்ட ப்ரும்மா, அந்தத் தாமரைக்கு ஆதாரமாக இருந்த உனது திருமேனியைக் காண முடியவில்லை. அப்போது ப்ரும்மா, இத்தனை பெரிய தாமரையில் தனியாக அமர்ந்துள்ள நான் யார்? இந்த மலர் எங்கிருந்து உருவானது? என்று சிந்திக்கத் தொடங்கினான்.

3. அமுஷ்ய ஹி ஸரோருஹ: கிமபி காரணம் ஸம்பவேத்
இதி ஸ்ம க்ருத நிச்சய: ஸ: கலு நாலரந்த்ராத் வநா
ஸ்வயோக பல வித்யயா ஸமவரூடவாந் ப்ரௌடதீ:
த்வதீயம் அதிமோஹனம் ந து கலேபரம் த்ருஷ்டவாந்

பொருள்: குருவாயூரப்பனே! மிகுந்த அறிவு கொண்டவனாக உன்னால் உருவாக்கப்பட்ட ப்ரும்மா, அந்தத் தாமரை மலர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு காரணப் பொருள் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். தனது யோக சக்தியாலும், ஞானத்தாலும் அந்தத் தாமரை மலரின் தண்டில் உள்ள த்வாரம் வழியாக கீழே சென்றான். இருந்தாலும் உன்னுடைய அழகான திருமேனி அவனுக்கு புலப்படவில்லை.

4. தத: ஸகல நாலிகா விவர மார்க்க: மார்கயந்
ப்ரயஸ்ய ஸத வத்ஸரம் கிமபி நைவ ஸந்த்ருஷ்டவாந்
நிவ்ருத்ய கமலோதரே ஸுக நிஷண்ண: ஏகாக்ரதீ:
ஸமாதி பலம் ஆததே பவத் அநுக்ரஹை காக்ரஹீ

பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் அந்தத் தண்டில் உள்ள பல த்வாரங்களிலும் நுழைந்து நூறு வருடம் உன்னைத் தேடினான். அவனுக்கு எதுவும் புலப்படவில்லை. பின்னர் தேடுதல் முயற்சியைக் கைவிட்டு, அந்த மலரின் மீது சுகமாக அமர்ந்து, உன்னுடைய அனுக்ரஹத்தைப் பெற விரும்பி, தன் மனதை ஒருமைப்படுத்தி, ஸமாதி நிலையில் அமர்ந்தான்.

5. சதேந பரிவத்ஸரை: த்ருட ஸமாதி பந்த்தோல்லஸத்
ப்ரபோக விசதீக்ருத: ஸ கலு பத்மிநீ ஸம்பவ:
அத்ருஷ்டசரம் அத்புதம் தவ ஹி ரூபம் அந்தர் த்ருசா
வ்யசஷ்ட பரிதுஷ்டதீ: புஜக போக பாகாச்ரயம்

பொருள்: ஸ்ரீ அப்பனே! இப்படியாக நூறு வருடம் ஸமாதி நிலையில் தவம் புரிந்தான். அதனால் மிகவும் தெளிவான ஞானத்தைப் பெற்றான். அதன் பின்னர் நூறு வருடமாக காணப்படாததும், வியப்பை அளிக்கக் கூடியதும், ஆதிசேஷன் மீது வீற்றிருப்பதும் ஆகிய உனது திருமேனியை தனது ஞானப் பார்வை மூலம் கண்டான் அதனால் மிகுந்த மகிழ்வு கொண்டான்.

6. க்ரீட மகுடோல்லஸத் கடக ஹார கேயூர யுக்
மணிஸ்ப்புரத மேகலம் ஸுபரிவீத பீதாம்பரம்
கலாய குஸுமப்ரபம் கலதலோல்லஸத் கவுஸ்துபம்
வபு: தத் அயி கமல ஜந்மனே தர்சிதம்

பொருள்:  பகவானே! குருவாயூரப்பனே! ப்ரும்மா உன்னை எப்படிக் கண்டான்? க்ரீடம், மகுடம் ஆகியவை ஒளிவீசும் தலை, வளையல்கள், முத்து மாலைகள், தோள் வளையல்கள் அலங்கரித்தும்; ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணமும்; நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த பொன் ஆடையும்; கழுத்தில் ப்ரகாசிக்கும் கவுஸ்துப மணியும்; காயாம்பூவின் நிறமும் உடையதான உனது திருமேனியை - தாமரையில் தோன்றி ப்ரும்மா எப்படிக் கண்டானோ அதே போல் நானும் த்யானிக்கிறேன்.

7. ச்ருதி ப்ரகர தர்சித ப்ரசுர வைபவ ஸ்ரீபதே
ஹரே ஜயஜய ப்ரபோ பதம் உபைஷி திஷ்ட்யா த்ருசோ:
குருஷ்வ தியம் ஆசு மே புவந நிர்மிதௌ கர்மடாம்
இதி த்ருஹிண வர்ணித ஸ்வகுண பம்ஹிமா பாஹிமாம்

பொருள்: லக்ஷ்மியின் பதியே! ஸ்ரீ அப்பனே! உன்னைப் ப்ரும்மா எவ்வாறு துதித்தான் - வேதங்களால் காண்பிக்கப்பட்ட பெருமை உடையவனே! லக்ஷ்மியின் நாதனே! ஹரியே! உனக்கு ஜெயம் ஜெயம்! ப்ரபுவே! நான் செய்த புண்ணியம் நீ எனக்குத் தென்பட்டாய். இந்த உலகைப் படைப்பதற்குத் தேவையான ஞானத்தை நீ எனக்கு அளிக்க வேண்டும் - இப்படியாகப் ப்ரும்மாவால் துதிக்கப்பட்ட திருக்கல்யாண குணங்களை உடையவனே! குருவாயூரப்பா! என்னை நீ காக்க வேண்டும்.

8. ஸபஸ்வ புவநத்ரயீ ரசன தக்ஷதாம் அக்ஷதாம்
க்ருஹாண மத் அநுக்ரஹம் குரு தபச்ச பூயோ விதே
பவது அகில ஸாதநீ மயி ச பக்தி: அத்யுத்கடேத்
உதீர்ய கிரம ஆததா: முதித சேதஸம் வேதஸம்

பொருள்: குருவாயூரப்பா! ப்ரும்மாவின் ப்ரார்த்தனையைக் கேட்ட நீ அவனிடம் - ப்ரும்மாவே! குறைவற்ற மூன்று உலகங்களையும் ஸ்ருஷ்டிக்கும் திறமையை நீ பெறுவாய். எனது அருளைப் பெறுவாயாக. மறுபடியும் உனது தவம் தொடங்கட்டும். என்னிடத்தில் தீவிர மாகவும் அனைத்தையும் முடிக்கும் திறனுள்ளதாகவும் விளங்கும் பக்தி உனக்கு உண்டாகக் கடவது - என்று கூறினாய். இதனைக் கேட்ட ப்ரும்மாவை நீ மகிழ்ச்சியில் ஆழ்த்தினாய்.

9. சதம் க்ருத தபாஸ்தத: ஸகலு திவ்ய ஸம்வத்ஸரான்
அவாப்ய ச தபோ பலம் மதிபலம் ச பூர்வாதிகம்
உதீக்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுநா
பவத்பல விஜ்ரும்பித: பவந பாதாஸீ பீதவாந்

பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக நீ உபதேசம் செய்த பின்னர் ப்ரும்மா மேலும் நூறு தேவ வருடம் தவம் இயற்றினான். இதனால் அதிகமான தவ வலிமையும் அதனால் முன்பைவிட அதிக ஞானத்தையும் பெற்றான். அந்த நேரம் அவன் அமர்ந்திருந்த தாமரையானது காற்றில் மெதுவாக அசைந்து. உனது சக்தி பெற்ற ப்ரும்மா காற்றையும் நீரையும் உறிஞ்சினான்.

10. தவைவ க்ருபயா புன: ஸரஸி ஜேந தேநைவ ஸ:
ப்ரகல்ப்ய புவநத்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜா நிர்மிதௌ
ததா வித க்ருபயா பரோ குருமருத் புராதீச்வர
தவ்மாசு பரிபாஹிமாம் குருதயோக்ஷிதை; ஈக்ஷிதை:

பொருள்: குருவாயூரப்பனே! அந்த ப்ரும்மா உன்னுடைய தயையால் (கருணையால்), அந்தத் தாமரை மலரையே தனது ஆதாரமாகக் கொண்டு மூன்று உலகங்களையும் படைத்து, அதனைத் தொடர்ந்து ஜீவன்களையும் படைக்கத் தொடங்கினான். இப்படிப் பட்ட பல மகிமைகளை உன்னுள் கொண்டவனே! குருவாயூரப்பா! உன்னுடைய கருணையான பார்வை மூலம் என்னையும் காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar