Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » வைகுண்டம் சென்றது
ஸநகர் முதலானோர் வைகுண்டம் சென்றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
04:07

1 க்ரமேண ஸர்கே பரிவர்த்தமானே
கதா அபி திவ்யா: ஸநகாதய: தே
பவத் விலோகய விகுண்ட லோகம்
ப்ரதிபேதிரே மாருத மந்திரேச

பொருள்: குருவாயூரப்பனே! ஸ்ருஷ்டிச் செயலானது நல்லபடியாக நடந்து வந்தது. அப்போது ஒரு முறை தெய்வீகமான ஸநகர் போன்றவர்கள் உன்னைக் காண, உன்னை வணங்க வைகுண்டத்திற்கு வந்தனர் அல்லவா? என்றார் பட்டத்ரி, இதற்கு ஸ்ரீஅப்பன் ஆம் என்றான்.

2 மனோக்ஞ நை: ச்ரேயஸ கானனாத்யை;
அனேக வாபி மணிமந்திரைச்ச
அனோபமம் தம் பவத: நிகேதம்
முனிச்வரா: ப்ராபு: அதோத கக்ஷ்யா:

பொருள்: குருவாயூரப்பனே! அந்த முனிவர்கள் வைகுண்டத்தின் ஆறு கோட்டை வாசல்களைக் கடந்தனர்; தொடர்ந்து நைச்ரேயஸம் என்ற தோட்டத்தைக் கடந்தனர். அடுத்து பலவிதமான குளங்கள், ரத்தினகற்கள் பதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவை சூழ நிற்கும் உனது வைகுண்டத்தை அடைந்தார்கள் அல்லவா?

3. பவத்தித்ருக்ஷுன் பவனம் விவிக்ஷுன்
த்வா: ஸ்தௌ ஜய: தான் விஜய: அபி அருந்தாம்
தேஷாம் ச சித்தே பதம் ஆப கோப:
ஸர்வம் பவத் ப்ரேரணயைவ பூமந்

பொருள்: எங்கும் உள்ளவனே (பூமந்) குருவாயூரப்பனே! உனது தரிசனம் பெற விருப்பமுற்றவர்களாகவும் உனது இடத்திற்குள் நுழைய விரும்பியவர்களாகவும் வந்த ஸனகர் முதலியவர்களை வாயிற்காப் போர்களான ஜயன் மற்றும் விஜயன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஸனகாதிகள் மனதில் கோபம் உண்டாயிற்று. இவை உனது விருப்பப்படி அல்லவா நடந்தது.

4. வைகுண்டலோக: அநுசித ப்ரசேஷ்டௌ
கஷ்டௌ யுவாம் தைத்யகதிம் பஜேதம்
இதி ப்ரசப்தௌ பவதாச்ரிதௌ தௌ
ஹரிஸம்ருதி: ந: அஸ்து இதி நேமது: தான்

பொருள்: ஸ்ரீ அப்பனே! ஸனகாதிகள் அந்த வாயிற்காப்பாளர்களை நோக்கி, துஷ்டர்களே! வைகுண்ட லோகத்திற்குப் பொருந்தாத விதமாக நீங்கள் நடந்து கொண்டதால் அசுரப் பிறவி அடைவீர்கள் என்று சபித்தனர். (இவர்கள் சாபத்தின்படி ஜயன் விஜயன் இருவரும் இரண்யகசிபு, இரண்யாட்சகன் ஆகவும், ராவணன், கும்பகர்ணனாகவும், சிசுபாலன், தந்த வக்கிரன் ஆகவும் பிறந்தனர்). இதனால் மனம் வருந்திய ஜயன் விஜயன் இருவரும் அந்த முனிவர்களிடம், நாங்கள் எப்படிப் பிறந்தாலும் அந்த ஹரியின் நினைவு நீங்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள் அல்லவா?

5. ததேதத் ஆஜ்ஞாய பவான் அவாப்த:
ஸஹைவ லக்ஷ்ம்யா பஹி: அம்புஜாக்ஷ
ககேச்வர அம்ஸ அர்ப்பித சாருபாஹு:
ஆனந்தயம் தாந் அபிராம மூர்த்யா

பொருள்: தாமரை மலர் போன்று அழகான கண்களை உடையவனே! குருவாயூரப்பனே! வாயிலில் நடந்த விவரத்தை அறிந்து கொண்டு மஹாலக்ஷ்மியுடன் இணைந்து கருடனின் தோளில் உனது அழகான கைகளை வைத்துக் கொண்டு, உனது அழகான திருமேனியுடன், ஸனகாதிகளை ஆனந்தப்பட வைப்பவனாக வெளியில் வந்தாய் அல்லவா?

6 ப்ரஸாத்ய கீர்ப்பி: ஸ்துவத: முனீந்த்ராந்
அனன்ய நாதௌ அத பார்ஷதௌ தௌ
ஸம்பரம் பயோகேன பவை: த்ரிபி: மாம்
உபேதாம் இதி ஆத்தக்ரூபம் ந்யகாதீ:

பொருள்: குருவாயூரப்பா! நீ உள்ளிருந்து வெளியே வந்த பின்னர் உன்னை முனிவர்கள் வணங்கி நின்றனர். அவர்களின் கோபத்தை உனது கனிவான சொற்களால் சமாதானம் செய்தாய். பின்னர் ஜயவிஜயன் ஆகியோரை நோக்கி, நீங்கள் இருவரும் என்னை விரோதம் செய்வதன் மூலம் உண்டாகும் த்வேஷ யோகம் செய்து, மூன்று பிறவிகளுக்குப் பின்னர், மீண்டும் என்னை வந்து அடைவீர்களாக என்று ஆதரவு இல்லாத அவர்களிடம் கூறினாய் அல்லவா?

7.த்வதீய ப்ருத்யௌ அத கச்யபாத் தௌ
ஸுராரிர் வீரௌ திதௌ திதௌ த்வௌ
ஸந்த்யா ஸமுத்பாதன கஷ்டசேஷ்டௌ
யமௌ ச லோகஸ்ய யமாவிவாந்யௌ

பொருள்: ஸ்ரீ அப்பனே! உன்னால் நல்வார்த்தைகள் கூறப்பட்ட ஜயவிஜயன் ஆகிய இருவரும் கச்யப முனிவருக்கும் அவரது மனைவியான திதி ஆகிய இருவருக்கும் தேவர்களுடைய சத்ருக்களான அசுர வீரர்களாக பிறந்தனர். கச்யபரும் திதியும் இணைந்து ஸந்தியா காலத்தில். ஆகையால் இந்த இருவருக்கும் பிறந்த புத்திரர்கள் இருவரும் யமனைப் போன்றே (அனைவருக்கும் துயரை விளைவிப்பவர்களாக) விளங்கினர்.

8. ஹிரண்ய பூர்வ: கசிபு: கிலைக:
பர: ஹிரண்யாக்ஷ: இதி ப்ரதீத:
உபௌ பவந்நாதம் அசேஷலோகம்
ருஷா ந்யருந்தாம் நிஜவாஸனாந்தௌ

பொருள்: குருவாயூரப்பனே! அவர்கள் இருவரும் இரணிய என்ற பதத்தை முதலில் உடைய கசிபு (இரணியகசிபு) என்றும், இரண்யாக்ஷன் என்றும் பெயர் பெற்று இருந்தார்கள். இவர்கள் தங்களது அசுரப்பிறப்பால் தங்கள் அறிவை இழந்து உன்னை நாயகனாகக் கொண்டிருந்த அனைத்து உலகங்களையும் தங்கள் கோபத்தினால் அழிக்கத் தொடங்கினார்கள் அல்லவா?

9. தயோ: ஹிரண்யாக்ஷ பஹாஸு ரேந்த்ர:
ரணாய தாவந் அநவாப்த வைரீ
பவத்ப்ரியாம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ய
சசார கர்வாத் விநதத் கதாவாந்

பொருள்: குருவாயூரப்பனே! அவர்களில் ஒருவனான இரண்யாக்ஷன் தன்னுடன் போர் புரியத் தகுந்த பகைவன் எவனையும் காண முடியாமல் அலைந்தான். அப்போது உன் மீது ப்ரியமானவளான பூமிதேவியை கவர்ந்து எடுத்துச் சென்று கடலின் அடியில் மறைத்து வைத்தான். தொடர்ந்து தனது கர்வத்தின் காரணமாக கர்ஜனை செய்து கதை ஆயுதத்துடன் சுற்றி வந்தான் அல்லவா?

10. தத: ஜலேசாத் ஸத்ருசம் பவந்தம்
நிசம்ய பப்ராம கவேஷயந் த்வாம்
பக்தைசத்ருச்ய: ஸ க்ருபாநிதே த்வம்
நிருந்தி ரோகான் மருதாலயேச

பொருள்: குருவாயூரப்பனே! கருணை என்பதே கடலாக உள்ளவனே! அந்த இரண்யாக்ஷன், வருணன் மூலமாக உன்னைத் தமக்கு நிகரானவன் என்று அறிந்தான் (இரண்யாக்ஷன் கடலில் இறங்கி வருணனிடம் சண்டையிடச் சென்றபோது வருணன் இதனைக் கூறினான்). அதன் பின்னர் உன்னைத் தேடி அலைந்தான். குருவாயூரின் அதிபதியே! பக்தனால் மட்டுமே உன்னைக் காணமுடியும் அன்றோ! (இதனை இரண்யாக்ஷன் அறியவில்லை போலும்). நீ அனைத்து பிணிகளையும் நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar