Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமிர்தசரஸில் கோபாஷ்டமி; ... சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவில் யாகசாலை பூஜை சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

31 அக்
2025
10:10

சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. அங்கு தினசரி, உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்து, அதிகளவில் மக்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இக்கோவில் கட்டட கலையில் சிறப்பு அம்சம் பொருந்திய, அஷ்டாங்க விமானத்தில் அமைந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மகாசம்ப்ரோஷணம் நடந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்., 15ம் தேதி திருப்பணி துவக்கப்பட்டது. இதில், அஷ்டாங்க விமானம், சன்னிதிகள் மற்றும் இதர இடங்களை பழுது பார்த்து புதுப்பித்து, வர்ணம் பூசும் பணி மற்றும் கோவில் தரைதளம் அமைத்தல், மின் இணைப்பு பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி, மடப்பள்ளி, அன்னதானம் கூடம் சீரமைப்பு ஆகிய திருப்பணிகள், 2 கோடி ரூபாயில் உபயதாரர்கள் வாயிலாக நடந்தன. தற்போது, திருப்பணிகள் முடிந்த நிலையில், இன்று ( 31ம் தேதி ) ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான இன்று காலை 8:30 மணி முதல் மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள், அனைத்து சன்னிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு, திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar