Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்நெல்லி இலந்தியம்மன் கோவில் ... புதுச்சேரி கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி விழா நிறைவு ; தீர்த்தவாரி புதுச்சேரி கவுசிக பாலசுப்பிரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

31 அக்
2025
12:10

திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது,  முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது.


108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிவிழாக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் இன்று காலை நடைபெற்றது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள், ஆலயத்தினரின் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். வைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21நாட்கள் நடைபெறும் விழாவில் டிசம்பர் 20ம்தேதி முதல் பகல்பத்து திருவிழா தொடங்கி  09.01.2026 ம்தேதி வரையும் நடைபெறுவதுடன், டிசம்பர் 29ம்தேதியன்று மோகினி அலங்காரமும், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் டிசம்பர் 30ம்தேதி அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது.  விழா ஏற்பாட்டினை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் விழா ஏற்பாட்டுகளை கோவில் ஊழியர்கள், அர்ச்சர்கள் செய்திருந்தனர். இந்த வருடத்தில்  இரண்டாவது வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு.ஏற்கனவே இந்த வருடம் ஜனவரி மாதத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar