பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
05:07
1. ப்ரயவ்ரதஸ்ய ப்ரிய புத்ர பூதாத்
ஆக்நீத்ர ராஜாத் உதித: ஹி நாபி:
த்வாம் த்ருஷ்டவான் இஷ்டதம் இஷ்டி மத்யே
தவைவ துஷ்ட்யை க்ருதயஜ்ஞ கர்மா
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பனே! (மநுவின் மகன் ப்ரியவ்ரதன் என்பவன். இவன் துருவனின் தந்தையான உத்தானபாதனின் அண்ணன் ஆவான்). ப்ரியவ்ரதனின் மகனான ஆக்னீத்ரன் என்பவனின் மகன் நாபி என்பவன் ஆவான். இவன் உன்னை மகிழ்விக்கவே பல யாகங்கள் இயற்றினான். அப்போது அந்த யாகங்கள் நடுவில் கேட்பதைத் தருகின்ற உன்னைக் கண்டான் அல்லவா?
2. அபிஷ்டுத: தத்ர முனீஸ்வரை: த்வம்
ராஜ்ஞ: ஸ்வதுல்யம் ஸுதம் அர்த்யமான:
ஸ்வயம் ஜனிஷ்யே அஹம் இதி ப்ருவாண:
திரோதிதா: பர்ஹிஷி விச்வ மூர்த்தே
பொருள்: குருவாயூரப்பனே! விச்வத்தின் உருவமே! யாகத்தில் தோன்றிய முனிவர்கள் உன்னைப் பலவாக ஸ்தோத்ரம் செய்தனர். அவர்கள் உன்னிடம், அரசனான நாபிக்கு உன்னை ஒத்தது போல் ஒரு மகன் வேண்டும் என்று யாசித்தனர். (அவன் போல் வேண்டும் என்றால் நிகரில்லாத அவன்தானே வரமுடியும்) ஆகையால் நீ அவர்களிடம், நான் அப்படியே பிறக்கிறேன் என்று கூறி அக்னியில் (பர்ஹிஷி) மறைந்தாய் (திரோதா) அல்லவா?
3. நாபி ப்ரயாயாம் அத மேருதேவ்யாம்
த்வம் அம்சத: அபூ: ரிஷபாபிதான:
அலோக ஸாமான்ய குண ப்ரபாவ
ப்ரபாவிதாசேஷ ஜனப்ரமோத:
பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் நீ நாபியின் அன்பு மனைவியான மேருதேவி என்பவளிடம் - இந்த உலகில் உள்ள மக்களிடத்தில் காணப்படாத குணங்களுடனும், பெருமைகளுடனும், அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்படியான உன்னுடைய அம்சமான ரிஷபன் என்ற பெயர் கொண்டு தோன்றினாய்.
4. த்வயி த்ரிலோகீப்ருதி ராஜ்யபாரம்
நிதாய நாபி: ஸஹ மேருதேவ்யா
தபோவனம் ப்ராப்ய பவந்நிஷேவீ
கத: கில ஆனந்தபதம் தே
பொருள்: குருவாயூரப்பா! மூன்று உலகங்களையும் தாங்கி நிற்கும் உன்னிடம் (ரிஷபன்) தனது ராஜ்யத்தினை நாபி ஒப்படைத்தான். அதன் பின்னர் தனது மனைவியான மேருதேவியுடன் தவம் செய்ய காட்டிற்குச் சென்றான். அங்கு உன்னையே ஆராதனை செய்து கொண்டு, அதன் பிறகு உரிய காலத்தில், ஆனந்தம் நிரம்பியுள்ள உனது இடமான பரமபதத்தை அடைந்தான்.
5. இந்த்ர: த்வதுத்கர்ஷ க்ருதாத் அமர்ஷாத்
த்வவர்ஷ ந அஸ்மின் அஜநாபவர்ஷே
யதா ததா த்வம் நிஜயோக சக்த்யா
ஸ்வவர்ஷம் ஏனத் வ்யததா: ஸுவர்ஷம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ரிஷபதேவரான உன்னுடைய மகிமையையும் புகழையும் கண்டு இந்திரன் பொறாமை கொண்டான். இதனால் அஜநாபம் என்ற இந்தப் பூமியில் மழை பெய்வதை நிறுத்தினான். அப்போது நீ உன்னுடைய யோக சக்தியின் வலிமையால் மழையைப் பொழிய வைத்தாய் அல்லவா?
6. ஜிதேந்த்ர தத்தாம் கமநீம் ஜயந்தீம்
அத உத்வஹன் ஆத்ம ரதாசயோபி
அஜீஜன: தத்ர சதம் தநூஜாத்
ஏஷாம் க்ஷிதீச: பரத: அக்ர ஜன்மா
பொருள்: குருவாயூரப்பா! உன்னால் வெல்லப்பட்ட இந்திரன் மனம் திருந்தி தனது மகளான ஜெயந்தியை ரிஷபதேவரான உனக்கு மணம் முடித்தான். அவளுடன் நீயும் இன்பமாக விளங்கினாய். அவள் மூலமாக நூறு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்தவனான பரதன் என்பவன் பூமிக்கே அதிபதியாக ஆனான் அல்லவோ? (அவன் பெயரால்தான் நம் நாடு பாரதநாடு என்று அழைக்கப்படுகிறது).
7. நவ அபவான் யோகிவரா: ந அன்யே
தவ அபாலயன் பாரதவர்ஷ கண்டான்
ஸௌகா த்வசீதிஸ்தவ சேஷ புத்ரா:
தபோபலாத் பூஸுர பூயமீயு:
பொருள்: குருவாயூரப்பனே! உனது நூறு மகன்களில் ஒன்பது மகன்கள் மிகச் சிறந்த தவ யோகிகளாக விளங்கினர். (அவர்கள் - கவி, ஹரி, அந்தரிக்ஷன், ப்ரபுத்தன், ஆவிர்ஹோத்ரன், த்ரமிடன், சமசன் மற்றும் காபாஜனன் ஆகியோர்) மேலும் ஒன்பது மகன்கள் பரதவர்ஷத்தினைச் சேர்ந்த ஒன்பது கண்டங்களை ஆண்டனர். (அவர்கள்-குசாவர்த்தனன், இளாவர்த்தன், ப்ரம்மாவர்த்தன், மலயன், கேது, பத்ரசேனன், இந்த்ர ஸ்ப்ருக், விதர்ப்பன் மற்றும் சீகடன்). மீதம் உள்ள (எண்பத்து இரண்டு) மகன்களும் தவ வலிமையால் ப்ராமணன் ஆனார்கள் அல்லவா?
8. உக்த்வா ஸுதேப்ய: அத முனீந்த்ர மத்யே
விரக்தி பக்த்யான்வித முக்திமார்க்கம்
ஸ்வயம் கத: பாரம ஹம்ஸ்ய வ்ருத்திம்
அதா ஜடோன்மத்த பிசாச சர்யாம்
பொருள்: குருவாயூரப்பனே! முனிவர்கள் கூடியுள்ள சபையில் உனது மகன்களுக்கு (ரிஷபரான நீ) வைராக்யமும் பக்தியும் நிறைந்த முக்தி மார்க்கத்தை உபதேசம் செய்தாய் அல்லவா? அதன் பின்னர் முனிவர்கள் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு பித்தன், மூடன் போல் உலவி வந்தாய் அல்லவா?
9. பராத்ம பூதோபி பரோபதேசம்
குர்வன் பவான் ஸர்வ நிரஸ்யமான:
விகாரஹீனோ விசசார க்ருத்ஸ்னாம்
மஹீம் அஹீனாத்ம ரஸாபி லீன:
பொருள்: குருவாயூரப்பனே! நீ அனைத்து ஆத்மாக்களின் ரூபமாக இருந்த போதிலும் (ரிஷப தேவராக) அனைவருக்கும் உபதேசம் செய்து வந்தாய். நீ பித்தன் போன்று திரிவதைக் கண்ட மக்கள் உன்னை அவமானப்படுத்தினாலும் நீ எந்தவிதமான மாற்றமும் அடையாமல் ஆனந்தமாகத் திரிந்து வந்தாய்.
10. சயுவ்ரதம் கோம்ருக காகசர்யாம்
சிரம் சரன் ஆப்ய பரம் ஸ்வரூபம்
தவாஹ்ருதாங்க: குடகாசலே த்வம்
தாபான் மம அபாகுரு வாதநாத
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ மலைப் பாம்பு போன்றும், (மலைப்பாம்பு வ்ரதம் என்றால் - அசையாமல் இருந்து தான் உள்ள இடம் தேடி வரும் உணவை உட்கொள்வது) காகம், பசு, மான் (கைகளால் உணவு உண்ணுதல் போன்றவை அல்லாமல்) போன்றும் வாழ்ந்தாய். இதன் பின்னர் பரம்பொருள் உருவம் பெற்றாய். அதன் பின்னர் குடகு மலையில் உண்டான காட்டுத் தீயினால் உடல் எரிந்து. நீ என்னுடைய வேதனைகளை நீக்க வேண்டும்.