திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கோவிலூர் தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. நிர்வாக அறங்காவலர் சுவாமி ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள், அன்னதானத்தை துவக்கி வைத்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.நித்யானந்தகிரி சுவாமிகள், மாணவர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணசாமி, மாலதி ஆகியோர் செய்திருந்தனர்.