Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் பெய்த மழையால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

பதிவு செய்த நாள்

02 மே
2026
11:05

திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ஆண்டுகளுக்கு மேலாக சாமி சிலைகள் இல்லை. இதனால் அங்கு வழிபாடுகளும் நடைபெறுவது இல்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை வேண்டிக் கொண்டு பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர்.


இந்தநிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அமைந்துள்ள அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் 3006 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர் விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருமாங்கல்யம் மஞ்சள், விளக்கு, உலகத்தலான லிங்க திருமேனி உள்ளிட்ட 18 வகையான பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் எழுந்தருள பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் சென்றனர். இறுதியில் மலைக்கோட்டை நுழைவுவாயில் முன்பு நின்று பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனை பிரார்த்தனை செய்தனர். அதேபோல் மலைக்கோட்டை நுழைவுவாயில் பகுதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பின்னர் மலைக்கோட்டை நுழைவுவாயிலில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.


முன்னதாக அபிராமி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என் எஸ் வி சித்தன், ராஜ் மில்க் அதிபர் ராஜசேகரன், தொழிலதிபர்கள் பரந்தாமன், சித்ரா நாகராஜன், வள்ளி கும்மியைச் சேர்ந்த அன்பழகன், கார்த்திகா தேவி, சக்தி விநாயகர் சந்திரன், ஆடிட்டர் சிற்றம்பலம் நடராஜன், ஞான சிவானந்த சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ராமகிருஷ்ணன்,  முத்தையா ரமேஷ், சதீஷ், மற்றும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்பு பேரவை மற்றும் திண்டுக்கல் கிரிவலம் குழு சார்பாக மதன் வெங்கடேசன் கோபாலகிருஷ்ணன் பாலன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar