Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி ... மூணாறு ராஜகாளியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன் மூணாறு ராஜகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிங்கிரி மலை முழுவதும் ஒலித்த சிவகோஷம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
வெள்ளிங்கிரி மலை முழுவதும் ஒலித்த சிவகோஷம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 மே
2026
11:05

தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.


கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த, பிப்., 1ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இதனையடுத்து, பக்தர்கள் மலையேறி, ஈசனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் மலையேறினர். சித்ரா பவுர்ணமியான நேற்று, அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், மற்றும் கிரி மலையிலுள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.


போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முள்ளாங்காடு வனத்துறை சோதனை சாவடியிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் பக்தர்கள் சென்றனர். போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏராளமான அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்து, பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்கின்றனர்களா என சோதனை செய்த பின்பே, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். 150 போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


முன்னதாக அபிராமி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என் எஸ் வி சித்தன், ராஜ் மில்க் அதிபர் ராஜசேகரன், தொழிலதிபர்கள் பரந்தாமன், சித்ரா நாகராஜன், வள்ளி கும்மியைச் சேர்ந்த அன்பழகன், கார்த்திகா தேவி, சக்தி விநாயகர் சந்திரன், ஆடிட்டர் சிற்றம்பலம் நடராஜன், ஞான சிவானந்த சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ராமகிருஷ்ணன்,  முத்தையா ரமேஷ், சதீஷ், மற்றும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்பு பேரவை மற்றும் திண்டுக்கல் கிரிவலம் குழு சார்பாக மதன் வெங்கடேசன் கோபாலகிருஷ்ணன் பாலன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar