மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட எதுமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. மண்ணச்சல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட எதுமலையில் ஸ்ரீஅருணாச்சலலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் எந்த கோவிலிலும் அமைந்திராத வகையில் மூன்று நந்திகள் அமைந்துள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். 150 ஆண்டுக்கு பின் முதன்முறையாக தேர்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணிகளுக்கு பின் கடந்த மாதம் 27ம் தேதி தேர் திருவிழா துவங்கியது. தொடர்ந்து 30ம் தேதி சூர்யபிரபையிலும், ஜூலை ஒன்றாம் தேதி யானை வாகனத்திலும், இரண்டாம் தேதி யாழி வாகனத்திலும் சுவாமி திருவீதியுலா வந்தார். மூன்றாம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது. நான்காம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் சுற்றி வந்தது. சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.