புதுச்சேரி: வாழைக்குளம் அப்பாவு நகரில் செங்கழுநீரம்மன் செடல் உற்சவம் நடந்தது, திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி காலை அம்மனுக்கு அபிஷேகம், இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.22ம் தேதி இரவு அம்மன் வீதியுலா, 23ம் தேதி இரவு சிங்க வாகனத்தில் வீதியுலா, நேற்று பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. பகல் 1 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி அம்மனை வணங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். மாலை 4 மணிக்கு ரத உற்சவம் நடந்தது. இன்று 25ம் தேதி காலை அம்மனுக்கு அபிஷேகம், மாலை சந்தனக்காப்பு, இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா, இரவு 1 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை 26ம் தேதி இரவு 6 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.