மதுரை: மதுரை பழங்காநத்தம் குணஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் ஆடி இரண்டாம் வெள்ளி திருவிழா நடந்தது. ஜூலை 24ல் அம்மனுக்கு அபிஷேகம், பொங்கல் படைக்கப்பட்டது. ஜூலை 25ல் உற்சவ அம்மன் திருவீதி உலா நடந்தது. ஜூலை 26 ல் நடந்த அன்னதானத்தை துணை மேயர் திரவியம், மண்டல தலைவர் சாலைமுத்து, கவுன்சிலர் சின்னமுருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காமேஸ்வரன், செயலாளர் பழனிச்சாமி, வக்கீல் கண்ணன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.