தாண்டிக்குடி: தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா சிறப்பாக நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் பொங்கல் இடுதல், அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் ஆகியன நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.