Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விரைந்து படியுங்கள்! ஆடிவெள்ளியன்று ஆண்களும் விரதம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாம் இன்னொரு கோவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
04:07

கோவையில் ஒரு மாணவி காதல் தோல்வி காரணமாக விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்டதை படித்திருப்பீர்கள். பெண்கள் தங்கள் திருமண விஷயத்தில் அனுபவம் மிக்க பெற்றோர் சொல் கேட்காததே இதற்கு காரணம். இதோ! எத்தனையோ நுõறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. படித்து மனம் திருந்துங்கள்.  காவிரி பூம்பட்டினத்தில் கரிகாற்சோழன் ஆண்ட காலத்தில் வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி. அழகில் உயர்ந்தவள். அரண்மனை அருகில் இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள்.அப்பகுதியில் வசித்த காளன் என்பவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் திருடத் துவங்கினான். ஒருமுறை கையும், களவுமாக பிடிபட்டான். அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, குண்டலகேசி அவனைப் பார்த்தாள். அவன் மிகவும் அழகாக இருந்தான். குற்றவாளி என்றும் பாராமல் அவன் மீது காதல் வசப்பட்டாள். காளனை மறுநாளே துõக்கில் போட கரிகாலன் உத்தரவிட்டான். இதற்குள் தன் தந்தையிடம் தனது காதலை விவரித்தாள் குண்டலகேசி. ஒரு திருடனைப் போயா காதலிக்கிறாய்? என தந்தை கடிந்து கொண்டார். ஆனால், காதல் கண்ணை மறைத்ததால், குண்டலகேசி தனது நிலையில் பிடிவாதமாக இருந்தாள்.வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி. அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா? என்றான்.

தாங்கள் நான் கேட்பதைத் தருவீர்களா? என்றதும், என்ன கேட்டாலும் தருகிறேன் என வாக்களித்து விட்டான் மன்னன்.தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார்.  மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்து விட்டான். ஒரு நல்ல நாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும், காளனுக்கு ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் திருட்டுத் தொழிலில் இறங்கினான். இதை குண்டலகேசி கண்டித்தாள். இதுகாளனுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் மலை உச்சியில் சந்தோஷமாக இருந்து வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, இனியவரே! தங்கள் விருப்பப்படியே என்னைத் தள்ளிக் கொல்லுங்கள். ஆனால், சாகும் முன்  கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள், என்றாள். காளனும்வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான். இரண்டு முறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிர் இழந்தான். பின்னர் அந்த துரதிர்ஷ்டசாலிப் பெண், ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம், என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி சில காலம் வாழ்ந்து புத்தரின்திருவடியை எய்தினாள். இளம்பெண்கள் தங்கள் யாரைக் காதலிக்கிறோம் என்பது தெரியாமல் காதல் வலையில் விழுவது அன்று முதல் இன்று வரைதொடர்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்மிகக்கதைகளை சொல்ல வேண்டும். பள்ளிகளில் மீண்டும் நல்லொழுக்கவகுப்புகள் துவங்க வேண்டும். அப்படியானால் தான், இன்னொரு முறை கோவை சம்பவம் நிகழாமல் தடுக்கலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar