Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » காளிய நர்த்தனம்
காளிய நர்த்தனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
17:41

1. அதவாரிணி கோரதரம் பணிநம்
ப்ரதி வாரையிதும் க்ருத தீ: பகவந்
த்ருதம் ஆரித தீரக நீப தரும்
விஷ மாருத சோஷித பர்ணசயம்

பொருள்: பகவானே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த மடுவில் இருந்த கொடிய விஷம் கொண்ட அந்தப் பாம்பை அங்கிருந்து விரட்ட நீ எண்ணம் கொண்டாய். இதனால் அந்த மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடிய இலைகளுடன் இருந்த கடம்ப மரத்தின் மீது ஏறினாய் அல்லவா?

2. அதிருஹ்ய பத அம்புருஹேண ச தம்
நவ பல்லவ துல்ய மநோஜ்ஞ ருசா
ஹ்ரத வாரிணி தூரதரம் ந்யபத:
பரிகூர்ணித கோர தரங்க கணே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! புதியதாக தளிர் விட்ட இலை போன்ற அழகிய உனது சிறிய பாதங்களைப் பதித்து அந்த மரத்தின் மீது அமர்ந்தாய். அச்சம் விளைவிக்கும் சுழல்களும், பெரிய அலைகளும் கொண்ட அந்த மடுவின் நடுவில் நீ குதித்தாய் அல்லவா?

3. புவநத்ரய பார ப்ருத: பவத:
குரு பார விசும்பி விஜ்ரும்பி ஜலா
பரிமஜ்ஜயதி ஸ்ம தநு: சதகம்
தடிநீ ஜடிதி ஸபுட கோஷவதீ

பொருள்: குருவாயூரப்பா! மூன்று உலகங்களின் பாரத்தையும் தாங்கி உள்ளதால் உனது பாரம் அதிகமாக இருந்தது. இதனால் நீ குதித்தவுடன் உனது சுமை தாங்காமல் அந்த மடு நடுங்கியது. அதனால் அலைகள் பெரிய ஓசையுடன் வெகுவாக உயரத்தில் எழும்பின. அவை நிலத்தின் நூறு வில் அளவு தூரம் வந்தது அல்லவா?

4. அத திக்ஷு விதிக்ஷு பரிக்ஷுபித
ப்ரமித உதர வாரி நிநாத பரை:
உதகாத் உதகாத் உரக அதிபதி:
த்வத் உபாந்தம் அசாந்த ருஷா அந்தமநா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் குளத்தில் இருந்த நீர் அனைத்து திசைகளிலும் கலங்கிய படி, சுழல்கள் அதிகரித்து அதனால் பெருத்த ஓசையும் உண்டானது. இந்த ஓசையைக் கேட்ட காளியன் மிகுந்த கோபம் கொண்டான். அறிவு மங்கியவனாக நீரில் இருந்து கிளம்பி உன்னிடம் வந்தான்.

5. பண ச்ருங்க ஸஹஸ்ர விநி: ஸ்ருமர
ஜ்வலத் அக்நி கண உக்ர விஷ அம்பு கரம்
புரத: பணிநம் ஸமலோக்யதா:
பஷு ச்ருங்கிணம் அஞ்ஜந சைலம் இவ

பொருள்: குருவாயூரப்பா! தனது ஆயிரம் தலைகளில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பையும் கொடிய விஷத்தையும் அவன் கொண்டிருந்தான். அவனது உடலானது பல சிகரங்களை உடைய ஒரு பெரிய மலைத் தொடர் போல இருந்தது. இப்படியாக உன் அருகில் வந்த காளியனை நீ கண்டாய் அல்லவா?

6. ஜ்வலத் அக்ஷி பரிக்ஷரத் உக்ர விஷ:
ச்வஸந் ஊஷ்ம பர: ஸ மஹாபுஜக:
பரிதச்ய பவந்தம் அநந்த பலம்
ஸமவேஷ்டயத் அஸ்புட் சேஷ்டம் அஹோ

பொருள்: குருவாயூரப்பா! காண்பவர்கள் கண்கள் கூசும்படி ஒளிவீசும் கண்களை உடையவனும், எரிக்கும்படியான மூச்சுக்காற்றை விடுபவனும் ஆகிய அந்த காளியன் உன்னைத் தீண்டினான். மிகுந்த வலிமை உடைய நீயோ சிறிதும் அசையாமல் இருந்தாய். அதனைக் கண்ட அவன் கோபத்துடன் தனது உடலால் உன்னைச் சுற்றினான்.

7. அவிலோக்ய பவந்தம் அத ஆகுலிதே
தட காமிநி பாலக தேநு கணே
வ்ரஜ கேஹ தலே அபி அநிமித்த சதம்
ஸமுதீக்ஷ்ய கதா யமுநாம் பசுபா:

பொருள்: குருவாயூரப்பா! அப்போது கரையில் நின்றிருந்த உனது நண்பர்களான ஆயர் சிறுவர்கள் உன்னைக் காணாமல் வருத்தம் கொண்டனர். அதே நேரத்தில் ப்ருந்தா வனத்தில் பல கெட்ட சகுனங்கள் தோன்றியதால், உனக்கு ஆபத்து என்று எண்ணியபடி பல கோபர்கள் யமுனை நதியின் கரைக்கு விரைந்தனர்.

8. அகிலேஷு விபோ பவதீய தசாம்
அவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவ பரம்
பணி பந்தநம் ஆசு விமுச்ய ஜவாத்
உதகம்யத ஹாஸ ஜுஷா பவதா

பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! நீ காளியனால் சுற்றப்பட்டு உள்ள நிலைமையைக் கண்டனர். இதனால் மிகுந்த துக்கம் கொண்ட அவர்கள் தங்கள் உயிரை விடத் தயாரானார்கள். அப்போது நீ அந்தப் பாம்பின் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு புன்னகை பூத்தபடியே வெளியில் வந்தாய் அல்லவா?

9. அதிருஹ்ய தத: பணி ராஜ பணாந்
நந்ருதே பவதா ம்ருது பாதருசா
கல சிஞ்ஜித நூபுர மஞ்ஜு மிலத்
கர கங்கண ஸங்குல ஸங்க்வணிதம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் உனது சிறிய குழந்தைக் கால்களைக் கொண்டு காளியனின் படங்கள் நிறைந்த தலை மீது ஏறி நின்று நடனம் ஆடினாய். அப்போது உன் கால்களில் இருந்த கொலுசுகளும், கைகளில் இருந்த கிண்கிணிகளும் இனிமையாக உனது நடனத்திற்கு ஏற்ப தாளம் போட்டன அல்லவா?

10. ஜஹ்ருஷு: பசுபா: துதுஷு: முநய:
வவ்ருஷு: குஸுமாநி ஸுர இந்த்ர கணா:
த்வயி ந்ருத்யதி மாருத கேஹபதே
பரிபாஹி ஸ: மாம் த்வம் அதாந்த கதாத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ இப்படி நாட்டியம் ஆடுவதைக் கண்ட இடையர்கள் மகிழ்ந்தனர். தவ முனிவர்கள் ஆனந்தமாக ரசித்தனர். தேவர்கள் மலர்களைப் பொழிந்தனர். இப்படிப்பட்ட நீ என்னை, தீராத பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar