Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ப்ரலம்பாசுரன் வதம்
ப்ரலம்பாசுரன் வதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
05:07

1. ராமஸக: க்வாபி திநே காமத
பகவந் கதோ பவாந் விபிநம்
ஸுநுபி: அபி கோபாநாம் தேநுபி:
அபி ஸம்வ்ருத: லஸத் வேஷ:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பகவானே (காமத பகவந்) ஒருநாள் நீ பலராமனுடனும், இடையர் தோழர்களுடனும், பசுக்களுடனும் காட்டிற்குச் சென்றாய். அப்போது பல ஆபரணங்களை அணிந்து கொண்டு மிகவும் அழகாக இருந்தாய்.

2. ஸந்தர்சயந் பலாய ஸ்வைரம்
ப்ருந்தாவந ச்ரியம் விமலாம்
காண்டீரை: ஸஹ பாலை:
பாண்டீரகம் ஆகம: வடம் க்ரீடந்

பொருள்: குருவாயூரப்பா! அப்படிச் செல்லும்போது ப்ருந்தாவனத்தின் குறைவற்ற அழகினை பலராமனுக்குக் கூறிக்கொண்டே சென்றாய் அல்லவா? பின்னர் கையில் குச்சிகளை வைத்துக் கொண்டிருந்த உனது தோழர்களுடன் விளையாடினாய் அப்போது நீ பாண்டீரகம் என்னும் ஆலமரத்தின் அடியில் நின்றாய்.

3. தாவத் தாவக நிதந ஸ்ப்ருஹயாலு:
கோ மூர்த்தி: அதயாலு:
தைத்ய: ப்ரலம்ப நாமா ப்ரலம்ப
பாஹும் பவந்தம் ஆபேதே

பொருள்: குருவாயூரப்பா! அப்போது ப்ரலம்பன் என்ற பெயர் உடைய அசுரன் அங்கு வந்தான். அவன் எப்படி இருந்தான்? அவன் இரக்கம் என்பதே இல்லாதவனாகவும், உன்னைக் கொல்வதற்கு மிகவும் ஆவல் உடையவனாகவும், முழங்கால் வரை தொங்கும் கைகளை உடையவனாகவும், ஆயர் சிறுவன் போல் வேடம் தரித்தும் இருந்தான்.

4. ஜாநந் அபி அவிஜாநந் இவ தேந
ஸமம் நிபத்த ஸௌ ஹார்த்த:
வட நிகடேபடு பசுப வ்யாபத்தம்
த்வந் த்வ யுத்தம் ஆரப்தா:

பொருள்: குருவாயூரப்பா! இடையனைப் போல் வேடம் தரித்து வந்த அசுரனை, அவன் அசுரன் என்று நீ அறிந்திருந்தும் அறியாதவன் போல் நடித்தாய். அவனுடன் நட்புடன் பழகினாய். அந்த மரத்தடியில் மிகவும் புத்திசாலிகளான ஆயர் சிறுவர்களுடன் மற்போர் விளையாட்டைத் துவக்கினாய்.

5. கோபாந் விபஜ்ய தந்வந் ஸங்க்கம்
பல பத்ரகம் பவத்கம் அபி
த்வத் பலபீதம் தைத்யம் த்வத்
பல கதம் அந்வ மந்யதா பகவந்

பொருள்: பகவானே! குருவாயூரப்பா! நீ இடையர் சிறுவர்களை இரண்டு கோஷ்டிகளாகப் பிரித்தாய். ஒரு கோஷ்டிக்குப் பலராமனைத் தலைவன் என்றும், மற்றொரு கோஷ்டிக்கு நீ தலைவனாகவும் இருந்தாய். உனது பலத்தை முன்பே அறிந்திருந்ததால் பயந்த அசுரனை உனது கோஷ்டியில் இருக்க வைத்தாய்.

6. கல்பித விஜேத்ரு வஹநே ஸமரே
பர யூதகம் ஸ்வ தயித தரம்
ஸ்ரீதாமாநம் அதத்தா: பராஜித:
பக்த தாஸதாம் ப்ரதயந்

பொருள்: குருவாயூரப்பா! விளையாட்டில் தோற்றவர்கள், வென்றவர்களைத் தோளில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தாய். அப்போது, ஸ்ரீதாமன் என்ற உனது ப்ரியமான தோழனிடம் நீ தோற்றாய். நீ பக்தர்களுக்கு அடிமையாக இருப்பதை வெளிப்படுத்தும்படி அவனை உனது தோள்களில் தூக்கிச் சென்றாய் அல்லவா?

7. ஏவம் பஹுஷு விபூமந் பாலேஷு
வஸத்ஸு வாஹ்ய மாநேஷு
ராம விஜித: ப்ரலம்ப: ஜஹார
தம் தூரத: பவத் பீத்யா

பொருள்: எங்கும் நிறைந்து உள்ளவனே (பூமந்) குருவாயூரப்பா! இப்படியாக இந்த விளையாட்டில் சிலர் சுமக்கப்பட்டவர்களாகவும், சிரல் சுமப்பவர்களாகவும் இருந்தனர். அப்போது ப்ரலம்பன் தோற்றுவிட்டான். அவன் பலராமனைக் தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் உனக்குப் பயந்து சென்று விட்டான் அல்லவா?

8. த்வத் தூரம் கமயந்தம் தம் த்ருஷ்ட்வா
ஹலிநி விஹித கரிம பரே
தைத்ய: ஸ்வரூபம் ஆகாத் யத்ரூபாத்
ஸ ஹி பல: அபி சகித: அபூத்

பொருள்: குருவாயூரப்பா! உன்னிடம் இருந்து நீண்ட தூரம் தூக்கிச் சென்ற ப்ரலம்பனை, அவன் தோளில் அமர்ந்திருந்த பலராமன் தனது எடையை அதிகரித்துக் கொண்டு அழுத்தினான். அவனைச் சுமக்க இயலாமல் தனது உண்மையான உருவத்தை ப்ரலம்பன் எடுத்தான். அந்தப் பெரிய உருவத்தைக் கண்டவுடன் பலராமன் சற்று பயம் கொண்டான் அல்லவா?

9. உச்சதயா தைத்ய தநோ: த்வத்
முகம் ஆலோக்ய தூரத: ராம:
விகதபய: த்ருட முஷ்ட்யா ப்ருச
துஷ்டம் ஸபதி பிஷ்டவாந் ஏநம்

பொருள்: குருவாயூரப்பா! அந்த அசுரனின் உடல் உயரமாக இருந்தது. இதனால் அவன் நீண்ட தூரத்தில் இருந்தாலும், அவன் தோளில் அமர்ந்திருந்த பலராமனால் உனது திருமுகத்தைப் பார்க்க முடிந்தது. உடனே பலராமனின் பயம் நீங்கியது. தன்னுடைய திடகாத்ரமான முட்டியால் அசுரனை வதம் செய்தான்.

10. ஹத்வா தாநவ வீரம் ப்ராப்தம்
பலம் ஆலிலிங்கித ப்ரேம்ணா
தாவத் மிலிதோ: யுவயோ: சிரஸி
க்ருதா புஷ்ப வ்ருஷ்டி: அமரகணை:

பொருள்: குருவாயூரப்பா! ப்ரலம்பனைக் கொன்று விட்டுத் திரும்பிய பலராமனை நீ மிகுந்த ஆசையுடன் தழுவிக் கொண்டாய். இப்படியாக நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி நிற்கும்போது உங்கள் தலைகளில் தேவர்கள் மலர் தூவினர்.

11. ஆலம்ப: புவநாநாம் ப்ராலம்பம்
நிதநம் ஏவம் ஆரசயந்
காலம் விஹாய ஸத்ய: லோலம்ப
ருசே ஹரே ஹரே: க்லேசாந்

பொருள்: ஹரியே! கருவண்டு போன்ற நிறம் உடையவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகத்திற்குப் புகலிடமாக உள்ள நீ இப்படியாக ப்ரலம்பாசுரனை அழித்தாய். இப்படிப்பட்ட நீ சிறிதும் காலம் தாழ்த்தாமல் விரைந்து என்னுடைய துயரங்களை நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar