Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் ... ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் பல்லடம் அருகே மங்கள வேல் வழிபாடு ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் முருகன் கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் முருகன் கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

07 நவ
2025
10:11

பழநி: பழநி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்க மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜை நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர். பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கோயில் சார்பில் இலவச பிரசாதம், அன்னதானம் நாள் முழுவதும் வழங்கப்பட்டது.


மாலையில் திருக்கல்யாணம் மண்டபத்தில் விளக்கு பூஜை நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.


திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, குள்ளமனம்பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar